ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும்.”
(கலி-4)
இது, தலைவன்கண் நிகழ்ந்த மிகுதித் தலையளி வஞ்சமென்று தலைவி உட்கொண்டுபிரியுங்கொல்லென நினைத்தற்கு நிமித்தமாயிற்று. இதனானே தலைவன் செய்திகளாய்ப் பின்னர்த்தலைவி கூறுவனவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாக அமைத்துக் கொள்க.
இனி,
“அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கேளாள் தமியள் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் கண்ணிய துணரா அளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கு நிரைநிலை அதர பரன்முரம் பாகிய பயமில் கானம் இறப்ப வெண்ணுதி ராயி னறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக எண்ணுநள் போல முன்னங் காட்டி முகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமோ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயின ளுயிர்த்த காலை மாமலர் மணியுரு விழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்டொடி