யுழையம் ஆகவும் இனைவோள் பிழையலள மாதோ பிரிதுநாம் எனினே”1 |
(அகம்-5) |
“இருங்கழி முதலை மேந்தோ லன்ன...............ஞான்றே.” |
(அகம்-3) |
இவை அகம், |
“வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை கந்துபிணி யானை யயாவுயிர்த் தாஅங் கªன்றூழ் நீடிய வேய்பயி லழுவத்துக் குன்றூர் மதிய நோக்கி நின்றுநினைந் துள்ளினெ னல்லனோ யானே முள்ளேயிற்றுத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுத லெமது முண்டோர் மதிநாட்டிங்க ளுரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழல்தப வுலவை யாகிய மரத்த கல்பிறங்கு மாமலை யும்பரஃ தெனவே.” |
(நற்றிணை-62) |
இது நற்றிணை. இவை தலைவிகண் நிகழ்ந்தனவும் அவடன்மையும் பின்னர்த் தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்த மாயவாறு காண்க. “அறியாய் வாழி தோழியிருளற” (அகம்-53) என்பது தலைவன்கண் நிகழ்ந்தது தலைவி நினைந்து தோழிக்குக் கூறியது “நெஞ்சு நடுக்குற” என்னும் (23) பாலைக்கலியும் அது. |
“உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரொடும் விளையாடு வான்மன்னோ |
1 கணவன் தலைவிபால் நிகழ்ந்த முன்நிகழ்ச்சியை நினைந்ததற்கு உதாரணம் இச்செய்யுள். முகத்தள் மென்மெலகுறுகவந்து முறுவலளாய் யான் பிரிவு வினைப்படுதலுக்கு உடன்படாத நினைவுடன் புதல்வன் தலையை மோயினள் உயிர்த்த காலை அவள் தோற்றம் கண்டு செலவு அழுங்கினேன் என முன் நிகழ்ந்த நிகழ்ச்சி கூறி இப்போது செலவழுங்கும் நெஞ்சுக்குக் கூறினான். |