பக்கம் எண் :

380தொல்காப்பியம் - உரைவளம்

பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்
தறலாரும் வையையென் றறைகுந குளராயின்.”

(கலி-30)
 

இதுவும் அது.
 

“ஈன்பருந் துயவும் வான்பெரு நெடுஞ்சினை
பொரியரை வேம்பின் புள்ளி நீழற்
கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த வுரன்மாய் மாலை
யுள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய
வினைமுடித் தன்ன வினியோண்
மனைமான் சுடரொடு படர்பொழு தெனவே.”

(நற்றிணை-3)
 

என்னும்  நற்றிணையும்  (3) அது. இவ்வாறன்றி வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.

(43)
 

பாரதியார்
 

46. நிகழ்ந்தது...........................ஆகும்
 

கருத்து:  இது,  ஐந்திணை  இயல் விளக்கிய முன் சூத்திரத்தின் அடங்காமல் திணைக்குரிப் பொருளாய்
அகத்துறைகளில் வந்துபயில் வனவற்றுள் பிறிதொரு செய்தி கூறுகிறது.
 

பொருள்:   நிகழ்ந்தது-தலைமக்கள்   பால்முன்  நிகழ்ந்த  செய்திகள்;  நினைத்தற்கு-பின்  ஏற்றபெற்றி
நினைவுறுதற்கு; ஏதுவுமாகும்-ஏற்புடை ஏதுக்களாதலு முண்டு.
  

குறிப்பு:     இந்நூலார், முன் ‘புணர்தல் பிரிதல்’  என்னும் (14) சூத்திரத்தால்  திணைக்குரிய பொருள்
ஐந்தையும்   சுட்டினார்   செய்யுளில்   ஆட்சி    பெறுவன  வேறு  சிலவும்   உளவாதலின்  அவற்றை
“உரிப்பொருளல்லன”   எனும்   சூத்திரத்தால்   சுட்டி,  அவற்றுள்  கொண்டு   தலைக்கழிதல்  முதலிய
சிலவற்றை   இயைபு   நோக்கி   ஐந்திணை    இலக்கணச்   சூத்திரத்தை  அடுத்தே  கூறி,  அவ்வாறு
உரிப்பொருளாகும் வேறு சிலவற்றை இச்சூத்திரத்தானும் அடுத்த சூத்திரத்தானும் விளங்க வைத்தார்.