பக்கம் எண் :

382தொல்காப்பியம் - உரைவளம்

“அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொலிந் திலங்கு மெயிறுகெழு துவர்வாய்
ஆகத் தரும்பிய முலையள், பணைத்தோள்
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன
மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு
பேயு மறியா மறையமை புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்வு பிரிந் திசைப்பக்
 

“கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையிற்
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்த மண்ணுநள் போல
நடுங்கஞர் தீர முயங்கி நெருநல்
ஆக மடைதந் தோளே, வென்வேல்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீ ரடுக்கத்து வியலகம் பொற்பக்
கடவு ளழுதிய பாவையின
மடவது மாண்ட மாஅ யோளே.”
2
 

எனும் அகம் (62) செய்யுளுமதுவே.
 

சிவலிங்கனார்
 

(இ-ள்)  தலைவன்  தலைவரிடையே  முன்  ஒரு  கால் நிகழ்ந்த நிகழ்ச்சிப் பின்னர் ஒரு கால் நிகழும்
நிகழ்ச்சியில் நினைவு கூர்தற்குரிய காரணமாகவும் பெறும் என்றவாறு.
  

தலைவி    தொடர்பாக  நிகழ்ந்ததைத்  தலைவன் நினைப்பதும் தலைவன் பால் நிகழ்ந்த நிகழ்ச்சியைத்
தலைவி   நினைப்பதும்    கொள்க.  அந்நினைப்புப்   பின்நிகழ்ச்சிக்கு   அம்முன்  நிகழ்ச்சி  காரணமாக
அமையும்  என்க.  தலைவன்  தன்  கண் நிகழ்ந்த நிகழ்ச்சியும்  தலைவி  தன் கண் நிகழ்ந்த  நிகழ்ச்சியும்
நினைதலும் கொள்க.
  


2 இச்செய்யுளில்   நடுங்கு   அஞர் தீர முயங்கி நெருநல் ஆகம் அடைதந்தோளே என்று தலைவியின்
நிகழ்ச்சி கூறப்பட்டது.