பக்கம் எண் :

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே சூ.47383

தலைவன்   தன் கண்ணே நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைதற்கு உதாரணம். “வேர் பிணிவெதிர” (நற்-62)
என்பது.  தலைவி  தன்  கண் நிகழ்ந்த  நிகழ்ச்சிக்கு உதாரணம் வந்தவழிக்காண்க. “யாருமில்லை தானே
கள்வன்”
  (குறுந்)    என்பது  காட்டுதல்  சிறப்பின்று;   தலைவன்  தன்கண்  செய்த  செயலாக  அது
அமைதலின்.
 

தலைவி     கண்   நிகழ்ந்ததைத்  தலைவன்   நினைத்தற்குச்   செய்யுள்  “அளி  நிலை  பெறாக
தமரியமுகத்தள்”
 (அகம்-5)   என்பது.   தலைவன்   கண்  நிகழ்ந்ததை  அதாவது தலைவன் தன்னிடம்
நிகழ்த்தியதை  நினைத்தற்குச்  செய்யுள்  “நுண்ணெழில்  மாமை.............அறியேன்  என்னும்”  (கலி-4)
என்பது.
 

‘நினைத்தற்கு     ஏதுவும்    ஆகும்’    என்பதை  நினைத்தற்கும்   ஏதுவாம்   என   உம்மையைப்
பிரித்துக்கூட்டுக.     உம்மையால்   நினையாமையும்    கொள்ளலாம்.    ஆதலின்    அது   எதிர்மறை.
நினைத்தலேயன்றிக்      கூறுதற்கும்      ஆம்    எனக்கொள்ளும்    நச்சினார்க்கினியர்    கூற்றின்படி
எச்சவும்மையாகவும் கொள்ளலாம்.
 

47.

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே
 
(47)

ஆ.மொ.இல.
 

Expression of what once happened
also forms the theme of literature on
aspects of love.
 

இளம்பூரணர்
 

47. நிகழ்ந்தது...........திணையே.
 

இதுவும் அது.
 

(இ-ள்)   நிகழ்ந்தது   கூறி   நிலையலும்  திணை-முன்பு   நிகழ்ந்ததனைக்   கூறிப்போகா  தொழிதலும்
பாலைத்திணையாம்.
  

“ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சிணைப்
பொரியரை வேம்பின் புற்றி நீழற்
கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்