பக்கம் எண் :

384தொல்காப்பியம் - உரைவளம்

வில்ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினென் அல்லனோ யானே உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.”
1

(நற்றிணை-3)

(47)
 

நச்சினார்க்கினியர்
 

47. நிகழ்ந்தது...............திணையே.
 

இஃது ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்-பொ-அகத்-41) என்னுஞ் சூத்திரதிற்கொரு புறனடை கூறுகின்றது.
 

(இ-ள்)   நிகழ்ந்தது கூறி-ஒன்றாத்தமரினும் என்னுஞ் சூத்திரத்துத்  தலைவன்கண் நிகழ்ந்த கூற்றினைத்
தலைவியுந்  தோழியுங் கூறி,  நிலையலுந்திணையே-அதன்கண்  நிலைபெற்று  நிற்றலும் பாலைத்திணையாம்
என்றவாறு.
 

“அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப்
பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ
யென்றோ னெழுதிய தொய்யிலும் யாழநின்
மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண்
சென்றோர் முகப்பப் பொருளுங் இடவா

 

தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா
ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார்
வளமை விழைதக்க துண்டோ வுளநா
ளொரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
யொன்றன்கூ றாடை யுடுப்பவரோ யாயினு
மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
சென்ற விளமை தரற்கு.”

(கலி-18)
 

1 “முன்  ஒரு காற்பிரிந்தபொழுது   இடச்சுரத்தில் மாலைப்பொழுதுகண்டு   இந்நேரம்   தலைவி  தன்
மனைக்கண் சிறந்த விளக்கொடு படரும் காலம் என்று நினைத்தேன் அல்லனோ? அந்நிறைப்பு இன்று
பிரியினும்வரும். அதனால் யான் அழுகுவேன்” என்பது இச்செய்யுட் கருத்து.