பக்கம் எண் :

நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே சூ.47387

கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவலிடு பதுக்கை ஆளுகு பறந்தலை
உருவில் பேய் ஊராத் தேரொடு
நிலம்படு மின்மினி போலப் பலவுடன்
இலங்குபரல் இமைக்கும் என்பநம்
நலந்துறந் துறைநர் சென்ற ஆறே.”
 

(அகம்-67)
 

இது மண்டிலத்தருமை2 தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது.
  

“நம்நிலை யறியா ராயினுந் தம்நிலை
அறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக்
காய்சின யானை கங்குல் சூழ
அஞ்சுவர விறுத்த தானை
வெஞ்சின வேந்தன் பாசறை யோரே.”

(அகம்-264)
 

இது     தலைவன்   பாசறைப்  புலம்பினமை  கூறக்கேட்ட  தலைவி  நம்நிலை அறியாராயினும் எனக்
கூறினாள்.3  “திசை  திசை  தேனார்க்குந்  திருமருத  முன்னுறை”  என்பது  (பாலைக் கலி-25) காவற்
பாங்கின்கட்   டலைவன்  கூறியது   கேட்ட  தலைவி   கூறியது.   பிறவும்  வருவனவெல்லாம்  இதனான்
அமைக்க.
 

பாரதியார்
 

47. நிகழ்ந்தது.....திணையே
 

கருத்து:    இதுவும்,   முற்சூத்திரத்தைப்  போலவே,  ஐந்திணைச்  சூத்திரங்களி  லடங்காது,  அறவே
அவற்றின்   வேறுமாகாது,   திணைக்குரிப்   பொருளாய்  அகத்துறையில்    வந்து  பயிலும்  பிறிதொன்று
கூறுகிறது.
  


2 பாலை நிலமாகிய   மண்டிலத்தின்  செலற்கரிய  நிலை  ‘என்ப‘  வரை உள்ளன தலைவன் பிரியுமுன்
கூறியன.

3 பாசறையில்   புலம்பியது   கேட்ட தலைவி  அவர்  பாசறையில் இருந்து  நம்மைப் பற்றிய நிலையை
அறியாராயினும் நம்மைப் பிரிந்ததால்வந்த துன்பமாகிய தம் நிலையை அறிந்தாரே எனத் தலைவன்கண்
நிகழ்ந்தது கூறினாள்.