குறிப்பு: பழைய உரைகாரர் இவ்விரு சூத்திரங்களையும் பாலைத்திணைக்கே உரியன போலக் கொள்ளுதல் அமைவுடைத்தன்று, பாலையில்லாப்பிற திணைகளிலும் நிகழ்ந்தது நினைத்தலும் நிகழ்ந்தது கூறி நிலையலும் வருதலின், அவை எல்லாத்திணைக்கும் உரியவாய் அமையுமென்க. அது பற்றியே, பாலைத்திணை இயல்புகளோடு இவற்றைக் கூறாது. அவை முடிந்து பொதுவியல் கூறும் இவ்விடத்து இச்சூத்திரங்கள் வைக்கப்பட்டன. மேலும், இவை புணர்ச்சி முதலிய ஐந்தனுள் எதனினும் அடங்காமல் உரிப்பொருளாயுமைதலின், “நிலையலும் பாலை” - “நிலையலும் பிரிவு”-என்னாது, ஐந்திணைகளுள் போல “நிலையலும் திணையே,” எனப் பொதுப்படக்கூறிய பெற்றியுமறிக. |