9

ix
  

நிலம்
  

முதற்பொருளுள்     ஒரு  கூறு  நிலம். அந்நிலத்தை நான்கு வகையாகப் பகுப்பர். அவை : மாயவனின்
உறைவிடமாகிய    காட்டுப்பகுதியும்,   முருகவேளின்    உறைவிடமாகிய   மலைப்பகுதியும்,   இந்திரனின்
உறைவிடமாகிய   நிலப்பகுதியும்,   வருணணின்  உறைவிடமாகிய  கடற்பகுதியும்  என்று முல்லை, குறிஞ்சி,
மருதம்,  நெய்தல்  என்று   பாகுபடுத்தப்பட்டுள்ளன  (5).   பாலைக்குத்   தனித்த   நிலமின்மை   முன்பு
சுட்டப்பட்டது; அதனால் போலும் தெய்வமும் சுட்டப்பெறவில்லை.
  

பொழுது
  

முதற்பொருளின்     மற்றொரு  கூறு  பொழுது. பொழுதை  இரண்டு பிரிவாகப்பகுப்பர். அவை: பெரும்
பொழுது, சிறுபொழுது   என்பன.  பெரும்பொழுதைக் கார்,  கூதிர்,  பனி எதிர் அல்லது முன்பனி, பின்பனி,
இளவேனில், முதுவேனில் என்றும்; சிறுபொழுதை மாலை, யாமம்,  வைகறை,  விடியல்,  நண்பகல்,  எற்பாடு
என்றும்  பகுப்பர்.  இவ்விரு   பொழுதும்   திணை   அடிப்படையில்  பொருத்தப்  பெறுகின்றன.  பெரும்
பொழுதில்  கார்  காலமும் சிறு பொழுதில் மாலையும்  முல்லைக்  குரியன (6);  பெரும்பொழுதில்  கூதிரும்
சிறுபொழுதில்  யாமமும்   குறிஞ்சிக்குரியன  (7);  பெரும்   பொழுதில்   பனிஎதிர்   பருவமும்  (8)  சிறு
பொழுதில் வைகறையும், விடியலும் மருதத்துக்கு  உரியன (9);  எற்பாடு  நெய்தலுக்கு  உரியது (10);  பெரும்
பொழுதில்  இளவேனிலும்,  முதுவேனிலும்   சிறுபொழுதில்   நண்பகலும்  பாலைக்கு  உரியன (11); பெரும்
பொழுதாகிய   பின்பனியும்  பாலைக்குரியது  (12).  பாலைக்கு  நிலமும்  தெய்வமும்  கூறப்படாத  போதும்
காலம் சுட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
  

ஒரு   ஆண்டைப்  பகுப்பது  பெரும்பொழுதாகும். ஒரு பெரும்பொழுது இரண்டு திங்களைக் கொண்டது.
கார்  காலம்  ஆவணி,   புரட்டாசி   ஆகிய  இரண்டு   திங்களைக்  கொண்டது.  (ஆங்கிலத்  திங்களில்
ஆகஸ்டின் பிற்பகுதி, செப்டம்பர்,  அக்டோபரின் முதற்பகுதி  என்பன  அமையும்).  கூதிர்  காலம்  ஐப்பசி,
கார்த்திகை  ஆகிய  இரண்டு  திங்களைக்   கொண்டது.   (அக்டோபரின்  பிற்பகுதி,  நவம்பர், டிசம்பரின்
முற்பகுதி). முன்பனிக்காலம் மார்கழி, தை ஆகிய இரண்டு திங்களைக் கொண்டது, (டிசம்பரின்