3. | முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந்தனவே பாடலுள் பயின்றவை நாடுங்காலை | (3) |
|
ஆ. மொ. இல. |
On examining the content of poetry, it is found, ‘Muthal’, ‘Karu’ and ‘Uri’ are the three which excel in order in the act of composing |
நம்பி - 7 |
அவைதாம் |
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எனமுறை நுதற்பொருள் மூன்றினும் நுவலப் படுமே. |
இல. வி. 8. நம்பி. சூத்திரமே. |
முத்து. அக. 6 |
முதல்கரு உரிப்பொருள் மூன்றா கும்மே. |
இளம்பூரணர் |
3. முதல்கரு.................. காலை |
இது மேற்சொல்லப்பட்ட நடுவண் ஐந்திணை ஆமாறும் ஒரு வகையான் உலகத்துப் பொருள் எல்லாம் மூவகையாகி அடங்கும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) பாடலுள் பயின்றவை நாடும் காலை - சான்றோர் செய்யுளகத்துப் பயின்ற பொருளை ஆராயுங்கால், முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதற்பொருள் எனவும் கருப்பொருள் எனவும் உரிப்பொருள் எனவும் சொல்லப்பட்ட மூன்று பொருண்மையுமே (காணப்படும்), நுவலுங்காலை முறை சிறந்தன - அவை சொல்லுங்காலத்து முறைமையாற் சிறந்தன. |