சொல்லதிகாரம் - இடையியல்83

ஏ-ஓ- புறனடை
 

256.

தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு
மளபி னெடுத்த விசைய வென்ப.                (13)

(தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும்
அளபின் எடுத்த இசைய என்ப)
 

ஆ.மொ.

இல.

The ‘ē’ which denotes clarity and ‘δ’  which denotes honour
will have the lengthened sound.

ஆல்.

/ē/  expressing the clarity of  choice  and /δ/  expressing
distinction will elongate for musical effect.

இளம்.

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்,  மேற்கூறிப்  போந்த  ஏகார
ஓகாரங்களின் வேறுபாடு கண்டு ஈண்டு உணர்த்துதல் நுதலிற்று.

வ-று : நீயேஎ கொண்டாய், ஓஒ பெரியன் எனவரும்.

சேனா.

இ-ள் : தெளிவின்கண்   வரும்   ஏகாரமும்  சிறப்பின்கண் வரும்
ஓகாரமும்   அளபான்மிக்க   இசையையுடைய    என்று   சொல்லுவர்
ஆசிரியர், எ-று.

அளபெடையாய்      வருதல்     மேற்காட்டப்பட்டனவற்றுள்ளும்
பிறாண்டும் கண்டு கொள்க.

தெய்.

இதுவுமது.

இ-ள் : தேற்றேகாரமும்  சிறப்பின்வரும்  ஓகாரமும்   அளபெடை
பெற்று வரும் என்று சொல்லுவர், எ-று.

உதாரணம் மேற் காட்டப்பட்டது.

நச்.

இஃது ஏகார ஓகாரங்கட்குப் புறனடை கூறுகின்றது.