அவை தலைவி ஆற்றாமை கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டு வந்தானெனத் தோழி கூறுவனவும், வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்திக் கூறுவனவும் உடன் போயவழி இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டும் வந்துழித் தலைவன் றோழிக்குக் கூறுவனவும், யானினைத்த வெல்லையெல்லாம் பொருள் முடித்து வாராது நின்னல நயந்து வந்தேனெனத் தலைவன் கூறலும், பொருள்வயிற் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்துவனவும், இடைச்சுரத்துத் தலைவன் செலவு கண்டோர் கூறுவனவும், மீட்சி கண்டோர் கூறுவனவும், ஊரின்கட் கண்டோர் கூறுவனவும் பிறவுமாம். அவை பாலைத்திணைக்கு விரவும் பொருளாமென்றுணர்க, |