பக்கம் எண் :

மரபுநிலை திரியா மாட்சிய வாகி சூ.48395

மனைமாண் டடங்கிய கற்பிற்
புனையீ ரோதி புலம்புறு நிலையே.”
 

இது செலவு கண்டோர் கூறியது.
 

“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்
தலந்தலை ஞெமையத் திருந்த குடிஞை
பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப்
பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர்
வன்பான் முரம்பி னேமி யதிரச்
சென்றிசின் வாழியோ பனிக்காடு நாளே
யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற்
குறும்பொறி கொண்ட சாந்தமொடு
நறுங்கண் ணியன் கொனோகோ யானே.”

(நற்.394)
 

இது நற்றிணை வரவுகண்டோர் கூறியது

(3)
 

“இனைந்து நொந்தழுதன ணினைந்துநீ டுயிர்த்தன
ளெல்லையு மிரவுங் கழிந்தன வென்றெண்ணி யெல்லிரா
நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல
மணியிற் பிறந்தநீர் போலத் துணிவாங்
கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றா
ணல்லெழின் மார்பனைச் சார்த்து.”

(கலி-142)
 

இது பெருந்திணைக்கட்1 கண்டோர் கூறியது

(4)
 

“குரவை தழீஇயர் மரபுளி பாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது
மாசில்வான் முந்நீர் வளைஇய தொன்னிலம்
ஆளுங் கிழமையொடு புணர்ந்த
வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே.”

(கலி-103)
 

இச்    சுரிதகத்துக்  குரவையாடல்  ஏறுகோடற்   கைக்கிளையுள்  விராய்  வந்தவாறுங்  குரவைக்குரிய
தெய்வத்தையன்றி  அரசனை   வாழ்த்திய   வாழ்த்து   விராய்  வந்தவாறுங் கொள்க. “விரவும் பொருளும்
வரவு” மெனவே ஆய்ச்சியர் குரவைக் கூத்தல்லது
 


1 காமம்மிக்க கழிபடர் கிளவியாகிய பெருந்திணை.