யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ?” |
(கலி-13) |
இது தலைவிக்குத் தலைவன் உடன்போக்கு மறுத்துக் கூறியது. இதன் சுரிதகத்து. |
“அனையவை காதலர் கூறலின் வினைவயிற் பிரிகுவ ரெனப்பெரி தழியாதி.” |
(கலி-13) |
என வினைவயிற் பிரிவு கூறலின் இது கற்பிற் கூறியதாயிற்று. |
இன்னும் இச்சூத்திரத்தான் அமைத்தற்குரிய கிளவிகளாய் வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க. |
(45) |
பாரதியார் |
48. மரபு.................என்ப |
கருத்து: இது மேற்சூத்திரங்களிலடங்காத அகத்துறைப் பகுதிகளுள், ஐந்திணை அல்லாத உரிப்பொருட்கெல்லாம் ஓர் புறனடை கூறுகிறது. |
பொருள்: மரபு நிலைதிரியா மாட்சியவாகி - முறைமை இயல் கெடாமலும், மாண்பு தருவனவுமாகி; விரவும் பொருளும் விரவும் என்ப - திணைக்குரிப் பொருளாய் ஐந்திணை ஒழுக்கத்தோடு அமைய அகத்துறைகளில் கலந்துரைத்தகுவன பிறவும் வந்து பயிலும் என்று கூறுவர் அகப்பொருணூலோர். |
குறிப்பு:இவ்வாறு கொள்ளாமல் இச்சூத்திரத்திற்கு “முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் விரவு தலாமென” இளம்பூரணர் கூறும் பொருள் பொருந்தாது. இதுவும் முன்னிரண்டும் இந்நூலார் திணைப் பொருள்களெனப் பொதுப்படக் கூறியதால், உரைகாரர் இதை முல்லைக்கும் முன்னிரண்டைப் பாலைக்கும் தனித்தமைத்துக் கூறுவது சூத்திரக் கருத்தாகாமை தேற்றம். மேலும், ‘திணைமயக் குறுதலும்’ எனனும் இவ்வியலின் முன் (12) சூத்திரத்தால் முதலொடு திணைக்குரிப் பொருள் ஐந்து மயங்குதற்கும், ‘உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே’ என்னும் (13) சூத்திரத்தால் ஐந்திணை இலக்கணத்திலடங்காத அகத்திற்குரிய பிற உரிப்பொருளெல்லாம் முதற் பொருளொடு மயங்குதற்கும், ‘எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் என்னும் (19) சூத்திரத்தால் கருப்பொருள்கள் தம்முள்ளும் முதல் |