உரிபொருள்களோடும் விரவுதற்கும், புறனடைச் சூத்திரங்கள் தனித்தனியே கூறி வைத்தாராதலால், ஈண்டு மீண்டும் முன் கூறிய முதலொடு கருப்பொருள் விரவுதலையே கூறினாரென்பது கூறலாமாதலின் அது பொருந்தாதென்க. ஐந்திணையிலடங்காப் பிற உரிப்பொருட்டுறைகள் இவ்வியலில் மேற் சுட்டினமட்டோடமையாது வேறு வருவனவுமுளவாதலின் அவற்றையமைக்க இப்புற நடை ஈண்டுக் கூறப்பட்டது. |
தலைமக்களின் மனையற மாட்சியைச் செவிலி வியந்து பாராட்டல், கற்பறக்காதலால் இற்சிறப்பின்பம் தலைவன் பாராட்டல், தலைவன் வரவு கூறுவாரைத் தோழி வாழ்த்தல், அவரைத் தலைவி வாழ்த்தல், இயற்பட மொழிதல், பரத்தை தலைவி பாங்காயினார் கேட்பக் கூறல் போல்பவையும் பிறவும் முன் கூறியவற்று ளடங்காமையின், அவையமைய இப்புறனடைச் சூத்திரமின்றியமையாமை யறிக. |