மாண்வரி யாகக் குறுமகள் தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.” |
(குறுந்-101) |
இக் குறுந்தொகைப் பாட்டு இல்லற நடத்தும் தலைவன்தான் தன் கற்புயர் காதல் மனைவியாலெய்தும் இற்பேரின்பத்தைப் பாராட்டியது. |
இனி தலைவன் வரவு கூறுவாளைத் தோழி வாழ்த்தற்குச் செய்யுள்: |
“அரும்பெற லமிழ்த மார்பத மாகப் பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை, தம்மில் தமதுண் டன்ன சினை தொறும் தீம்பழந் தூங்கும் பலவி னோங்குமலை நாடானை வருமென் றோளே.” |
(குறுந்-83) |
அவ்வயலிலாட்டியைத் தலைவி வாழ்த்தற்குச் செய்யுள்: |
“அமிழ்த முண்கநம் மயலி லாட்டி, பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை நெல்லி யம்புளி மாந்தி யயலது முள்ளி லம்பணை மூங்கிலிற் றூங்குங் கழை நிவந் தோங்கிய சோலை மலைகெழு நாடனை வருமென் றோளே.” |
(குறுந்-201) |
தலைவி இயற்பட மொழிதற்குச் செய்யுள்: |
“இதுமற் றெவனோ, தோழி! துணியிடை இன்னர் என்னு மன்னாக் கிளவி? இருமருப் பெருமை யீன்றணிக் காரா உழவன் யாத்த யீன்றணிக் காரா பாற்பெய் பைம்பயி ராரு மூரன் திருமனைப் பல்கடம் பூண்ட பெருமது பெண்டி ராகிய நமக்கே? |
(குறுந்-181) |
“நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே, சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு |