பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.” |
(குறுந்-2) |
என்பதுமியன் மொழிதலாம். |
பரத்தை தலைவி பாங்காயினார் கேட்பக் கூறியதற்குச் செய்யுள்: |
“கழனி மாத்து வளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன், எம்மிற் பெருமொழி கூறித், தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூக்கு மாடிப் பாவை போல, மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.” |
(குறுந்-8) |
“கணைக்கோட்டு வாளை கமஞ்சூன் மடநாகு துணர்ந்தேன் கொக்கின் தீம்பழங் கதூஉந் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க், குணாது தண்பெரும் பௌவ மணங்குக, தோழி! மனையோண் மடமையிற் புலக்கும் அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே.” |
என்னும் குறுந்தொகை (164) செய்யுள் காதற்பரத்தை தலை மகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்ததாகும். |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் கைக்கிளை பெருந்திணைகள் அகத்திணையில் கலந்து வருமாறு கூறுகின்றது. |
(இ-ள்) ஐந்திணை நிலங்களில் விரவிவரும் கைக்கிளை பெருந்திணைகள் புலனெறி மரபுக்கு மாறுபடாத சிறப்புடையனலாய் அகத்திணை யொழுக்கங்களில் விரவி வரும் என்று கூறுவர் நூலோர் என்றவாறு. |
விரவும் பொருள் என்பதால் தமக்கென நிலம் இல்லாமையால் எந்நிலத்தும் விரவும் பொருள் எனக்கொண்டு கைக்கிளை பெருந்திணை என்பதும் மீண்டும் விரவும் என்பதால் அவை அகன் ஐந்திணைக்கண் விரவி வரும் என்பதும் கொள்க. |