பக்கம் எண் :

402தொல்காப்பியம் - உரைவளம்

பொருந்தாது.   அன்றியும்     முதற்பொருள்    கருப்பொருள்   உரிப்பொருள்   ஆகிய   செய்யுட்குரிய
பொருள்கள் யாவுமே மயங்கும் எனின் புலனெறி வழக்கத்துக்கு ஓர் வரையறையில்லை என்றாகி விடும்.
 

49.

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாதாகும் திணையுணர் வகையே

(49)
 

ஆ.மொ.இல.
 

‘Ullurai Uvamam’ and ‘Enai Uvamam’ will not fail
to make clear understanding of ‘Thinai’ (aspects of love)
 

பி.இ.நூ.
 

நம்பி 237. இல.வி.அ.213
 

உள்ளுறை யுவமம் வெளிப்படை உவமம் என
எள்ளரும் உவமம் இருவகை யுடைத்தே.
 

இளம்பூரணர்
 

49. உள்ளுறை உவமம்.................வகையே.
 

இஃது உவம வகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
 

(இ-ள்)    உள்ளுறை உவமம்  ஏனை உவமம் என உள்ளுறைக் கண் வரும் உவமும் ஒழிந்த உவமமும்
என  இருவகையாலும்,  திணை   உணர்வகை   தள்ளாது   ஆகும்.   திணை உணரும் வகை தப்பாதாகும்
(ஏகாரம் ஈற்றசை)
 

உதாரணம் முன்னர்க் காட்டுதும்.
 

நச்சினார்க்கினியர்
 

49. உள்ளுறை..............வகையே
 

இஃது உவமவியலுள் அகத்திணைக் கைகோள் இரண்டிற்கும்’1பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது.
  


1 களவு, கற்பு