என்பது விரியுங் கதிரையுடைய இளஞாயிறு விசும்பிலே பரவா நிற்க, விடியற்காலத்தே இதழ்கண் முறுக்குண்ட தலைகள் அம்முறுக்கு நெகிழ்ந்த செவ்விப்பூவிடத்துக், கள்ளை வண்டு நுகர்ந்து விளையாடி, அதனானும் அமையாது பின்னும் நுகர்வதற்கு அவ்விடத்தைச் சூழ்ந்து திரியும் அச்செல்வமிக்க பொய்கையுட், பசிய இலைகளுடனின்ற தாமரைத்தனிமலர், தனக்கு வருத்தஞ் செய்யும் பனி ஒரு கூற்றிலே வடியாநிற்கத், தான் மிகச்செவ்வியின்றி அலருந் துறையினையுடைய ஊர என்றவாறு |