1 இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் ‘பாசடைத் தாமரைத் தனிமலர் தளைவிடும்’ என்றது இனிதுறு கிளவி. ‘துளிசிறந் திழிதரும் கண்ணின் நீர் அறல் வார’ என்றது துனியுறு கிளவி. 2 உவமப்போலி - உள்ளுறையுவமம். 3 கானவர் கவணுக்கு அஞ்சி யானை கைவிட்ட பசுங்கழை உயரச்சென்று நின்றது போலி யான் (தலைவி) தலைவனின் புகழுக்கும் பெருமைக்கும் இடையூறாக இருந்து அவனைப் போகாமல் தடைசெய்யின் எனக்கு வரும் இழிவுக்கு அஞ்சி இசைய அவன் நெடுந்தொலைவில் சென்றான் ஆனான்” என்பது இதில் உள்ள உள்ளுறை. இவ்வுள்ளுறைதரும் உவமத்துக்குச் சிறப்புக் கொடுத்து நிற்கும் ஏனை உவமம் மீன்எறி தூண்டினின் நிவக்கும் நிவப்பு. |