பக்கம் எண் :

406தொல்காப்பியம் - உரைவளம்

இனித்     தள்ளாதென்றதனானே,  “பா அலஞ்செவி”  என்னும்  பாலைக்கலியுட் (4) டாழிசை மூன்றும்
ஏனையுவமமாய்  நின்று   கருப்பொருளொடு  கூடிச்  சிறப்பியாது  தானே  திணைப்பொருள் தோன்றுவித்து
நிற்பன  போல்வனவுங்,  “கரை  சேர் வேழங்  கரும்பிற் பூக்குந்  துறைகே ழூரன்”    (ஐங்குறு-12) என்றார்
போலக்   கருப்பொருள்   தானே   உவமமாய்   நின்று உள்ளுறைப்பொருள் தருவனவும் பிறவும் வேறுபட
வருவனவும்   இதனான்    அமைக்க    இது    புறத்திற்கும்    பொது4   இதனான்   உள்ளுறையுவமும்,
ஏனையுவமமுமென உவமம் இரண்டேயென்பது கூறினார்.
 

பாரதியார்
 

49. உள்ளுறை.................வகையே
 

கருத்து:   இது,  அகத்துறைச் செய்யுட்களில் வரும் உரிப்பொருள் எல்லாவற்றிற்கும் சிறப்பாக உரித்தாம்
உவம வகை கூறுகிறது.
 

பொருள்:  திணையுணர்   வகையே - ஐந்திணை  உணர்த்தும்  உரிப்பொருட்  பகுதிகளில்; உள்ளுறை
உவமம் - உள்ளுறை உவமமானது; ஏனை  உவமமெனத்  தள்ளதாகும் - மற்றைய   உவமத் தோற்றம்போல
அருகாமல் வந்து பயிலும்:
 

குறிப்பு:   ஈற்றேகாரம்   பிரிநிலை,   அகத்துறைகளுள்  திணையுணர்  வகையை  வேறு  பிரித்தலின்1
அவ்வகையல்லாப் பிற அகப்பகுதிகளில் ஏனையுவமம் அருகாது என்பது குறிப்பு
 


4 உள்ளுறையுவமம்   புறத்துக்கு   வாராது    என்பதைத்    ‘தொல்காப்பியர்   கூறும்  உள்ளுறையும்
இறைச்சியும்’ என்னும் நூலில் காண்க.

1 இவர்  திணையுணர்வகையே  என்பதற்கு  ஏகாரம்  பிரி  நிலைப்பொருள் தருமாறு உரைஎழுதவில்லை
ஈற்றசைக்  கேற்பவே  எழுதியது  காண்க.  ஐந்திணையுள் அடங்கும் உரிப்பொருள் எனவும் அடங்கா
உரிப்பொருள்   இவர்   பிரித்து  உரை  எழுதி  வருதலினால் அவற்றுள்  ஐந்திணையுள்  அடங்கும்
உரிப்பொருள்பற்றிய  உள்ளுறை  தள்ளப்படாது என்று பொருள் கொண்டு ஏனையுவமம் ஐந்திணையுள்
சிறுபான்மை  வரும்எனவும் ஐந்திணையுள் அடங்கா உரிப்பொருள்களில் பெரும்பான்மைவரும் எனவும்
பிரித்துக் கூறுகின்றார்.