பொருளைக் குறிப்பிற்காட்டுவது உள்ளுறை. பொருளும் வெளிப்படையாக அமைய வருவது ஏனையுவமம். ஏனையுமவத்திற் காணப்படும் வெளிப்படைப் பொருளே திணையுணர்த்துமாதலின் உவமம் திணையுணர்த்தத் தேவையில்லை. |
50. | உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்1 கொள்ளும் என்ப குறியறிந் தோரே2 | (50) |
|
ஆ.மொ.இல. |
‘Ullurai’ will have all ‘Karupporuls’ except God as the place of its origin-so say the scholars well-versed in science of literature. |
பி.இ.நூ. |
அடுத்த சூத்திரத்துக் காண்க. |
இளம்பூரணர் |
50. உள்ளுறை தெய்வம்................தோரே. |
இஃது உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை உள்ளுறையாவது கருப்பொருட்டெய்வம் ஒழிந்த பொருளை, நிலம் என கொள்ளும் என்ப குறி அறிந்தோர் - இடமாகக் கொண்டுவரும் என்று சொல்லுவர் இலக்கணம் அறிந்தோர். |
(50) |
குறி-இலக்கணம் |
நச்சினார்க்கினியார் |
50. உள்ளுறை...உணர்ந்தோரே. |
இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது. |
(இ-ள்) உள்ளுறை - உள்ளுறை யெனப்பட்ட உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப - தெய்வ முதலிய கருப்பொருளும் டெய்வத்தை ஒழித்து கருப்பொருள்களே தனக்குத் தோன்றும் நிலனாகக் கொண்டு புலப்படு |
1 நிலனெனக் -நச், பாடம் 2 குறியுணர்ந்தோரே-பாடம் |