பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.331

*முதலிற்   கருவும்,   கருவில்   உரிப்பொருளுஞ்   சிறந்து   வரும்.  இம்மூன்றும்  பாடலுட்  பயின்று
வருமெனவே  வழக்கினுள்  வேறுவேறு  வருவதன்றி  ஒருங்கு  நிகழாவென்பதூஉம், நாடுங் காலையெனவே
புலனெறி  வழக்கிற்  பயின்றவாற்றான்  இம்மூன்றனையும்  வரையறுத்துக்  கூறுவதன்றி   வழக்கு   நோக்கி
இலக்கணங் கூறப்படாதென்பதூஉம் பெறுதும்:
  

‘நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்’  (தொல் - பாயிரம்)   என்று  புகுந்தமையிற்
பொருளும் அவ்விரண்டினானும் ஆராய்தல் வேண்டுதலின்.
  

இஃது1  இல்லதெனப்படாது  உலகியலேயாம்.2  உலகியலின்றேல் ஆகாயப்பூ நாறிற்றென்றவழி அதுசூடக்
கருதுவாருமின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும்.
  

இச்செய்யுள்   வழிக்கினை  நாடக  வழக்கென  மேற்கூறினார், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும்
உலகியல்  போலாது  உள்ளோன்  தலைவனாக   இல்லது புணர்த்தன் முதலாகப்  புனைந்துரை  வகையாற்
கூறும்  நாடக  விலக்கணம்  போல  யாதானு  மொரோ  வழி  ஒரு சாரார் மாட்டு  உலகியலான்  நிகழும்
ஒழுக்கத்தினை  எல்லார்க்கும்  பொதுவாக்கி  இடமுங் காலமும்  நியமித்துச்  செய்யுட்  செய்தல்  ஒப்புமை
நோக்கி.1 மற்று இல்லோன் தலைவனாக இல்லது புணர்க்கும் நாடக வழக்குப்
  


* ‘முதலிற்கருவும்............பெறுது’   எனக்   கூறியதற்குக்   காரணமாக அமைந்தது  “நல்லுலகத்து...................
வேண்டுதலின்” என்பது.

1. இஃது - புலனெறி வழக்கு.

2. உலகியல் அன்று என்பர் இறையனார் அகப்பொருள் உரைகாரர் நக்கீரர் (சூ 1).

1. நோக்கி நாடக வழக்கென மேற் கூறினார் என இயைக்க.