மென்று கூறுப; குறி அறிந்தோரே - இலக்கணம் அறிந்தோர் என்றவாறு. |
எனவே, உணவு முதலிய பற்றிய அப்பொருணிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறையுவமமாயிற்று. |
“ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய் மலரு நாடனொ டொன்றேன் றோழிமற் றென்றி னானே.” |
(குறுந்-208) |
இக் குறுந்தொகை பிறிந்தொன்றின் பொருட்டுப் பொருகின்ற யானையான் மிதிப்புண்ட வேங்கை நசையற உணங்காது. மலர் கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடனென்றதனானே தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் நம்மை இறந்துபாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினானெனவும், அதனானே நாமும் உயிர்தாங்கியிருந்து பலரானாலும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம் போல எனவும், உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க. |
ஒழிந்தனவும் வந்துழிக் காண்க. |
இனி அஃது உள்ளத்தான் உய்த்துணர வேண்டுமென மேற்கூறுகின்றார். |
பாரதியார் |
50. உள்ளுறை...............உணர்ந்தோரே. |
கருத்து: இது, உள்ளுறை உவமத்திற்கு நிலைக்களம் உணர்த்துகிறது. |
பொருள்: உள்ளுறை-அகத்திணையிற் பயிலும் உள்ளுறை உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளும் - கருப்பொருள்களும் தெய்வம் நீக்கி மற்றையவற்றைத் தனக்கு நிலைக்களனாகத் தழுவிவரும்; என்பகுறியறிந்தோரே-என்று கூறுவர் ஒப்பியலறிந்தோர். |