இதனுள், வீங்குநீர் பரத்தையர் சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செல்வி நிகழும் பரத்தையராகவும் பகர்பவர் பரத்தையரைத் தேரேற்றிக் கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம்மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாகவும் யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள் வந்தவண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப் பரத்தையற் தமது நலத்தை அத்தலைவனை நுகர்வித்தலாகவுங், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டுமருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறுத்தலாகவும், பொருள் தந்து ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோனுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க. |