பிறவும் இவ்வாறு வருவன வெல்லாம் இதனான் அமைக்க இங்ஙனங் கோடலருமை நோக்கித் ‘துணிவொடு வரூஉத் துணிவினோர் கொளினே’ (தொல்-பொ-உவ-23) என்றார். |
பாரதியார் |
51. உள்ளுறுத்து.................உவமம் |
கருத்து: இது, உள்ளுறை வுமமத்தின் இயல்பு கூறுகின்றது. இது, உள்ளுறை வுமமத்தின் இயல்பு கூறுகின்றது. |
பொருள்:- உள்ளுறுத்திதனோடு ஒத்துப் பொருள் முடிகென-வெளிப்படக் கூறும் பொருளோடு, உள்ளும் பொருளும் ஒத்து முடியுமாறு; உள்ளுறுத்திறுவதை உள்ளுறை உவமம்-உள்ளத்து ஊன்றி நுணுகி உணர அமைந்து முடிவது உள்ளுறை உவமமாகும். |
குறிப்பு:- இறுவதை என்பது, ஏற்றை என்பதுபோல, ஐயீறு பெற்று முடிந்த பெயர். |
“எற்றோ வாழி, தோழி! முற்றுபு கறிவளர் அடுக்கத்து இரவின் முழங்கிய மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி வரையிழி யருவு உண்டுறை தரூஉம் குன்ற நாடன் கேண்மை மென்தோள் சாய்த்தும் சால்பீன் றன்றே.” |
(குறுந்-90) |
மிளகுக்கொடி வளரும் மலையில், இரவில், இடிமுழங்கும் கார்தரு மழையில், உயிர் நிறைந்த முகக்கடுவன் விரும்ப அதன் கையகப்படாது கிளையினின்று நழுவிய மணமுள்ள பலாக்கனியை மலையருவி தக்கார் உண்ணத் தகுந்த துறையில் கொண்டு தரும் குன்ற நாடன் கேண்மை மெல்லிய தோளைச் சிறிது வருத்தினும் அமைதியை அளித்தது’ என்றது வெளிப்படக் கூறும் பொருள், இதில், செல்வம் நிறைந்த அயலார் தலைவியை விரும்பி வந்தோர் வரைய வொண்ணாமல் ஊரலரை அஞ்சிச் செறித்த தலைவியைக் காவல் நிறைந்த இற்புறத்தில் இரவில் தோழி கொண்டுதர, தலைவன் உடன் |