“உரைத்திசிற் றோழியது புரைத்தோ அன்றே துருக்கங் கமழும் மென்தோள் துறப்ப என்றி இறீஇயர்என் உயிரே.” |
(சிற்றட்டகம்) |
இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று.* |
(52) |
நச்சினார்க்கினியர் |
52. ஏனை................வகைத்தே. |
இஃது ஒழிந்த உவமங் கூறுகின்றது. |
(இ-ள்) ஒழிந்த உவமம் உள்ளத்தான் உணரவேண்டாது சொல்லிய சொற்றொடரே பற்றுக் கோடாகத் தானே உணர நிற்குங் கூறுபாட்டிற்கு என்றவாறு. |
பவளம்போலும் வாய் என்றவழிப் பவளமே கூறிவாய் கூறாவிடின் உள்ளுறையுவமமாம். அவ்வாறின்றி உவமிக்கப்படும் பொருளாகிய வாயினையும் புலப்படக் கூறலின் ஏனையுவமமாயிற்று. அகத்திணைக்கு உரித்தல்லாத இதனையும் உடன் கூறினார். உவமம் இரண்டல்லதில்லையென வரையறுத்தற்கும் இதுதான் உள்ளுறை தழீஇ1 அகத்திணைக்குப் பயம்பட்டு வருமென்றற்கும். |
பாரதியார் |
52. ஏனை................வகைத்தே |
கருத்து: இஃது உள்ளுறை ஒழிந்த மற்றைய உவமத்தோற்றம் உணர்த்துகிறது. |
* இளம்பூரணர் உரை பொருந்தாது ஏனை உவமமும் திணையுணர்த்தும் என்பதும் அதற்குக் காட்டும் உதாரணங்களும் பொருந்தா. குயில் கூவுதல் தொழிலும் துருக்கம் கமழ்தல் தொழிலும் காரணமாக அன்றிக் குயில் துருக்கம் என்னும் கருப்பொருள்களாலேயே திணையுணரப்படும். 1 உள்ளுறைதழீஇ-உள்ளுறைக்குச் சிறப்புக் கொடுத்து |