காமம் சாலா இளமையோள்வயின் கூறியதற்குச் செய்யுள்: |
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால் கொழுநிழல் ஞாழல் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவல்மிசைத் தாதொடு தாழ அகல்மதி தீங்கதிர் விட்டது போல முகனமர்ந்து ஈங்கே வருவாள் இவள் யார்கொல் ஆங்கே ஓர் வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார் உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார் கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற் பல்கலைச் சில்பூங் கலிங்கத்தாள் ஈங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வ மகள்; இவளைச் சொல்லாடிக் காண்பென் தகைத்து; நல்லாய் கேள், ஆய்தூவி அனமென அணிமயிற் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம் மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய் நிற்கண்டோர்ப் பேதுறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ? |
நுணங்கமைத் திரள்என நுண்இழை யணையென முழங்குநீர்ப் புணையென அமைந்த நின் தடமென்றோள் வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார் அணங்காகு மென்பதை அறிதியோ அறியாயோ? |
முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயல்துளி முகிழெனப் பெருத்தநின் இளமுலை மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார் உயிர்வாங்கு மென்பதை உணர்தியோ வுணராயோ? |
என ஆங்கு, பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய் யாதொன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேளினி நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப் பறையறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடைய யான்.” |
(கலித்-குறிஞ்-20) |