2. இவ்வியலிற் கூறப்படும் செய்திகள், பொருள்கள் யாவும் உள்ளோன் தலைவனாக வுள்ள நாடகவழக்கு பற்றியனவே; இல்லோன் தலைவனாகவுள்ள நாடக வழக்கு பற்றியனவல்ல என்பது. 3. இச் செய்யுளில் கான்கெழு நாடான் (குறிஞ்சி) குறும் பொறை நாடான் (முல்லை) நல்வயலூரன் (மருதம்) சேர்ப்பன் (நெய்தல்) என நானிலப் பெயர்களால் தலைவன் கூறப்படினும் ‘கொடுங்கழி நெய்தல்’ என இடம் கூறினமையால் அத்தலைவன் நெய்தல் நிலத்தலைவன் என்பது கூறப்பட்டதாம். நானிலத்துப் பெயரும் கூறப்பட்டு ஓர் நிலத்துத் தலைவன் என்பதைப் பெற வைத்தால் இப்பாட்டு செய்யுள் வழக்காயிற்று. உலக வழக்காயின் தெளிவாகக் கூறப்படும். |