இது முன்னர் அகத்திணை ஏழென நிறீஇ, அவற்றுள் நான்கற்கு நிலங்கூறிப் பாலையும் நான்கு நிலத்தும் வருமென்று கூறி’ உரிப்பொருளல்லாக் கைக்கிளை பெருந்திணையும் அந்நிலத்து மயங்கும் மயக்கமுங் கூறிக் கருப்பொருட் பகுதியும் கூறிப், பின்னும் பாலைப் பொருளாகிய பிரிவெல்லாங் கூறி, அப்பகுதியாகிய கொண்டுதலைக் கழிவின்கட் கண்ட கூற்றுப் பகுதியுங் அதனோடொத்த இலக்கணம் பற்றி முல்லை முதலியவற்றிற்கு மரபுகூறி, எல்லாத்திணைக்கும் உவமம்பற்றிப்பொருள் அறியப்படுதலின் அவ்வுவமப் பகுதியுங் கூறி, இனிக்கைக்கிளையும் பெருந்திணையும் இப்பெற்றிய வென்பார், இச்சூத்திரத்தானே கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது வென்பது உணர்த்துகின்றார். |