மருளின் மடநோக்கி நின்றோழி யென்னை யருளியல் வேண்டுவல் யான்.” |
(கலி-61) |
எனவரும். |
இது கைகோளிரண்டினுங் கூறத்தகாத வாய்பாட்டாற்1 கூறலிற் கைக்கிளையென்றார். குறிப்பென்றதனாற் சொல்லியின்புறுந் தலைவன்றன் குறிப்பின் நிகழ்ந்தது புறத்தார்க்குப் புலனாகாதென்பதூஉம் அகத்து நிகழ்ச்சி அறியும் மனைவியர்க்காயின் அது புலனாமென்பதூஉங் கொள்க. அது கிழவோன் பிறள் குணம் (தொல்-பொ-பொரு 40) என்னும் பொருளியற் சூத்திரத்து ஓதுதும். |
காமஞ் சாலா இளமையோன் வயினெனப் பொதுப்படக் கூறிய அதனால் வினைவல பாங்காயினார் கண்ணும் இவ்விதி கொள்க இதனைக் ‘காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்து என்னும் (a) முல்லைக் கலியான் உணர்க. (50) |
பாரதியார்: |
53. காமம் ... ... ... ... ... குறிப்பே |
கருத்து: இது அகத்திணை ஏழனுள் மேல் நடுவணைந்திணைக்குரிய இயல்புகள் கூறியபின் எஞ்சி நின்ற இரண்டில் கைக்கிளை இயல்பை விளக்குகிறது. |
பொருள்: காமஞ்சாலா இளமையோள் வயின்-காதற் செவ்விகனியும் பருவம் வராத சிறுமி ஒருத்தியிடம்; ஏமஞ்சாலா இடும்பை எய்தி-ஒரு தலைவன் தனக்கு மருந்தும் பிறிதில்லாப் பெருந்துயராம் காதனோய் கொண்டு; நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து - பட்டாங்குப் புகழ்தலும் (ஆற்றாமையால்) பழிப்பது போலப் புகழ்தலுமாகிய இருவகையானும் தன்பாலும் அச்சிறுமிபாலும் வீறுபெறத் தக்கன சார்த்தி; சொல்லெதிர் பெறாஅன் |
1 கூறத்தகாதவாய்பாடு; இளமையாண் உணராதாய்’. ‘நுமர்தவறு இல் என்பாய்’. மடலேறிநிறுக்குவன்’, ‘இவள் தந்தை விழுப்பொருள் கொடுக்கும் யாதுநீ வேண்டியது’, பொருள் வேண்டும் புன்கண்மையீன் டில்லை’ என்பன போல்வன |