என வந்தமை காண்க. இத்தாழிசைகளுள், (1) தலைவன் தன்னை நலியும் காமநோயை ‘இளமையா ணுணராதாய் ‘மடமையா னுணராதாய்’, சொல்லினு மறியாதாய்’ எனக் கூறுதலால், அவள் காமஞ் சாலா இளமையோள் என்பது அறியப்படும் (2) ‘களைநரின் நோய் செயும் கவின்’ எனவும், ‘இடை நில்லா தெய்க்கு நின் உரு’ எனவும், ‘ஒல்லையே உயிர் வவ்வும் உரு’ எனவும் அவளைப் புகழ்வதாலும் இக்கலியுள் சுரிதகத்தில் ‘மற்றிந் நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின், பொலங்குழாய் மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவன் போல்வல்யான்’ ‘நீ படுபழியே’ எனப்பழிப்பதுபோல அவள் பெருமை கூறுதலாலும் நன்மையும் தீமையும் என்றிரு திறத்தாலும் தன்னொடும் அவளொடும் தலைவன் தருக்கிய புணர்த்துக் கூறுதல் காண்க. (3) இளையோள் தனக்கு மறுமாற்றம் கூறா வழியும். “நுமர்தவறில் லென்பாய்” என விளித்து அவளிடம் சொல்லெதிர் பெறாத் தலைவன் தானே சொல்லி இன்புறுதல் காண்க. |