பி. இ. நூ. |
நம்பி 243. 244 |
“அகன்றுழிக் கலங்கல்”, “மடலேறுதலொடு” என்னும் இவ்விரு சூத்திரங்களில் கூறப்படுவனவற்றுள் ‘மடலேறுதல்’ என்பது தவிர மற்றையன தொல்காப்பியத்துக்கு மாறுபட்டன. |
இல.வி.அ.219 தொல்காப்பியச் சூத்திரமே. |
இளம்பூரணர் |
54. ஏறிய மடல்திறம்.......குறிப்பே |
இது பெருந்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) ஏறிய மடல் திறம் - ஏறிய மடற்றிறமும் இளமை தீர்திறம்-இளமை தீர்திறமும், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் -தேறுதலொழிந்த காமத்து மிடலொடு தொகைஇ-மிக்க காமத்து மிடலொடு தொகைஇ-மிக்க காமத்து மாறாய திறனொடு கூட்டி, செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பு - சொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்திணைக் கருத்து. |
கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், இது புணர்ந்த பின் நிகழும் என்று கொள்க. ஏறிய மடற்றிறம் தலைமகற்கே உரித்து. அது வருமாறு: |
“எழின்மருப் பெழில்வேழ மிகுதரு கடாத்தால் தொழின் மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங்கு அறிவுநம் அறிவாய்ந்த அடக்கமும் நாணொடு வறிதாகப் பிறரென்னை நகுபவும் நகுபுடன் மின்னவிர் நுடக்கமுங் கனவும்போல் மெய்காட்டி என்னெஞ்சம் என்னொடு நில்லாமை நனிவௌவித் தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா றெவன்கொலோ மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை அணிப்பூளை ஆவிரை யெருக்கொடு பிணித்தியாத்து மல்லலூர் மறுகின்கண் இவட்பாடு மிஃதொத்தன் எல்லீருங் கேட்டீமீன் என்று; |
படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை நல்கியாள் நல்கி யவை; |