பக்கம் எண் :

426தொல்காப்பியம் - உரைவளம்

பொறையென் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த
நிறைஅழி காமநோய் நீந்தி அறையுற்ற
உப்பியல் பாவை உறையுற் றதுபோல
உக்கு விடும்என் உயிர்;
 

பூளை பொலமலர் ஆவிரை வேய்வென்ற
தோளாள் எமக்கீத்த பூ;
உரித்தென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த
பரிசழி பைதல்நோய் மூழ்கி எரிபரந்த
நெய்யுண் மெழுகின நிலையாது பைபயத்
தேயும் அளித்தென் னுயிர்;
 

இளையாரும் ஏதிலவரும்; உளையான்
உற்ற துசாவுந் துணை;
 

என்றியான் பாடக் கேட்டு
அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின்
துன்பத்தில் துணையாய மடல்இனி இவட்பெற
இன்பத்துள் இடம்படலென் றிரங்கினள் அன்புற்று
அடங்கருந் தோற்றத்து அருந்தவ முயன்றோர்தம்
உடம்பொழித்து உயருல கினிதுபெற் றாங்கே.”

(கலி-நெய்-21)
 

இளமை     தீர்திறமாவது; இளமை நீங்கிய  திறத்தின்கண்  நிகழ்வது,  அது மூவகைப்படும்: தலைமகன்
முதியனாகித் தலைமகள்   இளையளாதலும்,   தலைமகள்   முதியளாகித்   தலைமகள்  இளையனாதலும்,
இவ்விரு   வரும்   இளமைப்  பருவம்  நீங்கியவழி  அறத்தின்மேல் மனம்  நிகழ்தலன்றிக் காமத்தின்மேல்
மனம் நிகழ்தலும் என.
 

“உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க
முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த
பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும்

முழங்கு புனலூரன் மூப்பு.”
1

(புறப்-இருபாற்பெருந்திணை-14)
 


1 புனலூரன்மூப்பு  முறுவலார்க்குக்களிசெய்யும்’  என்பதில்    புனலூரன் மூப்பு   என்றது   தலைவன் இளமைதீர்திறம்.