நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரி னுதுக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும் பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி நாறு மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே”. |
(அகம் -4) |
இது குறித்த காலம் வந்தது, அவரும் வந்தாரென ஆற்றுவித்தது. |
இக்களிற்றியானை நிரையுள் முல்லைக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது.4 |
‘கிளைபா ராட்டுங் கடுநடை வயக்களிறு முளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த வாணிற வுருவி னொளிறுபு மின்னிப் பரூஉவுறைப் பஃறுளி சிதறி வானவின்று பெருவரை நளிர்சிமை யதிர வட்டித்துப் புயலே நுரைஇய வியலிரு ணடுநாள் விறலிழைப் பொலிந்த காண்பின் சாயற் நடைஇத் திரண்ட நின் றோள்சேர் பல்லதைப் படாஅ வாகுமெங் கண்ணென நீயு மிருண்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி வரிவயங் கிரும்புலி வழங்கு நர்ப் பார்க்கும் பெருமலை விடாகம் வரவரி தென்னாய் வரலெளி தாக வெண்ணுதி யதனா னுண்ணிதிற் கூட்டிய படுமா ணாரந் தண்ணிது கமழு நின்மார் பெருநா ளடைய முயங்கே மாயின் யாமும் |
4. இப்பாடலில் ‘கார்செய்தன்றே கவின்பெறு கானம்’ என்பதால் கார்காலும் முல்லை நிலமுமாகிய முதற் பொருளும் முல்லை முதலிய கருப்பொருளும், கானம் கார்செய்தன்றாதலின் உதுக்காண் தோன்றும் குறும்பொறை நாடன் என்பதால் உரிப்பொருளும் தோன்றுதல் காண்க. |