பக்கம் எண் :

ஏறிய மடல்நிறம் இளமைதீர் திறம் சூ.54429

கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி ஆயின்
அவரை நினைத்து
நிறுத்தென்கை நீட்டித்
தருகுவை ஆயின் தவிருமென் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ;
 

மையில் சுடரே மலைசேர்தி நீயாயின்
பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை
கைவிளக் காகத் கதிர்சில தாராய்என்
தொய்யில் சிறைத்தானை தேர்கு;
 

சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ எம்மை
நயந்து நலஞ்சிதைத் தான்;
 

மன்றப் பனைமேல் மலைமாந் தளிரேநீ
தொன்றிவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ
மென்றோள் ஞெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன்
நன்றுதீ தென்று பிற;
 

நோயரி ஆகச் சுடினுஞ் சுழற்றியென்
ஆயிதழ் உள்ளே கரப்பன் கரந்தாங்கே
நோயுறு வெந்நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
வேவ தளித்திவ் வுலகு
மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதருங் காமமுங் கௌவையும் என்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை
நலியும் விழுமம் இரண்டு;
எனப்பாடி,
 

இனைந்துநொந் தழுதனள் நினைந்துநீடு உயிர்த்தனள்
எல்லையும் இரவும் கழிந்தவென் றெண்ணி எல்லிரா
 

நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல
மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங்
கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள்
நல்லெழின் மார்பனைச் சார்ந்து.”

(கலி-நெய்-25)
 

மிக்க    காமத்துமிடலாவது   ஐந்திணைக்கண்   நிகழும்  காமத்தின்  மாறுபட்டு  வருவது.  அஃதாவது
வற்புறுத்துந் துணையின்றிச்