பக்கம் எண் :

430தொல்காப்பியம் - உரைவளம்

செலவழுங்குதலும்,     ஆற்றாமை    கூறுதலும்,    இழிந்திரந்து  கூறுதலும்,  இடையூறு  கிளத்தலும்,
அஞ்சிக்கூறுதலும் ,  மனைவி   விடுத்தலிற்   பிறள்வயிற்சேறலும்;  இன்னோரன்ன   ஆண்பாற் கிளவியும்,
முன்னுறச்  செப்பலும்,  பின்னிலை முயறலும்  கணவனுள்வழி  இரவுத்தலைச்சேறலும்,  பருவம்  மயங்கலும்
இன்னோரன்ன   பெண்பாற்கிளவியும்,   குற்றிசையும்;   குறுங்கலியும்   இன்னோரன்ன  பிறவுமாகிய ஒத்த
அன்பின் மாறுபட்டு வருவன எல்லாம் கொள்ளப்படும். அவற்றுட் சில வருமாறு:
 

“நடுங்கி நறுநுதலாள் நன்னலம்பீர் பூப்ப
ஒடுங்கி உயங்கல் ஒழியக் - கடுங்கணை
வில்லேர் உழவர் விடரோங்கு மாமலைச்
செல்லேம் ஒழிக செலவு.”

(புறப்-இருபாற்பெருந்திணை-1)
 

இது செலவழங்குதல்.
 

“பணையாய் அறைமுழங்கு பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க்
கழிகாமம் உய்ப்பக் கனையிருட்கண் செல்வேன்
வழிகாண மின்னுக வான்.”

(புறப் - பெருந்திணை-6)
 

இஃது இரவுத்தலைச்சேறல்
 

“பெரும்பணை மென்தோள் பிரிந்தார்எம் உள்ளி
வரும்பருவம் அன்றுகொல் ஆம்கொல்-சுரும்பிமிரும்
பூமலி கொன்றை புறவெலாம் பொன்மலரும்
மாமயிலும் ஆலும் மலை.”

(புறம்.இருபாற்பெருந்திணை-6)
 

இது  பருவமயங்கல்.  பிறவும்  வந்தவழிக் கண்டுகொள்க. மெய்ப்பாட்டியலுள் “இன்பத்தை வெறுத்தல்”
(மெய்ப்பாடு-22) முதலாக நிகழ்பவை பொருளாக வருங்கிளவியும் இதன் பகுதியாகக் கொள்க.
 

நச்சினார்க்கினியர்
 

54. ஏறிய................குறிப்பே
  

இது முறையானே, இறுதிநின்ற பெருந்திணை யிலக்கணங் கூறுகின்றது.