சான்றவர்க் கொல்லாங் கடனானா லிவ்விருந்த சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென் மான்ற துளியிடை மின்னுற்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டியளிய ளென் நெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் |
பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தெ னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவென் பாய்மோ நிறுத்து; |
யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு; உய்யா வருநோய்க் குயவாகு மைய லுறீஇயா ளீத்தவிம் மா; காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு மாணிழை மாதரா ளேஎரெனக் காமன தாணையால் வந்த படை; காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம மெழினுத லீத்தவிம்மா; அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும் வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு; அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற நேரிழை யீத்தவிம் மா; |
ஆங்கதை, யறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ |