தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று. |
(கலி-92) |
இது மிக்க காமத்துமிடல். |
செப்பிய நான்கெனவே செப்பாதனவாய் அத்துணைக் கந்தருவமாகக்1 கூறுகின்ற “பின்னர் நான்கும்2 பெருந்திணை பெறும்” (தொல்-பொ-கள-14) என்ற பெருந்திணையும் நான்கு உளதென்று உணர்க. குறிப்பென்றதனான் அந்நான்கும் பெருந்திணைக்குச் சிறந்தன வெனவும் ஈண்டுக் கூறியன கைக்கிளைக்குச் சிறந்தனவெனவுங் கொள்க. |
பாரதியார் |
54 ஏறிய... ... ... ... குறிப்பே |
கருத்து: இது, நிறுத்தமுறையானே, எழுதிணைகளுள் இறுதியாக எஞ்சி நின்ற பெருந்திணை இயல் கூறுகின்றது. |
பொருள்: ஏறிய மடற்றிறம்-மடலேறுவேன் எனக் கூறுதலோடமையாது. தலைவன் மடலேறுதலும்; இளமை தீர்திறம் இன்பம் துய்த்தற்கு உரிய பருவம் கழிந்த பிறகு எழும் விழைச்சு விருப்பமும்3, தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் தெளிய வொண்ணாமல் அறிவழிக்கும் கழி காமமும்; மிக்க காமத்து மிடலொடு தொகைஇ-கரை கடந்த காமத்தால் விரும்பாரை வலிதிற் புணரும் வண்மையொடு கூட்டி; செப்பிய நான்கும் பெருந்திணைக்குறிப்பே-கூறப்பட்ட இந்த நான்கும் புரைபடுகாம இழிவெழுக்கத்தின் வகை குறிப்பனவாகும். |
குறிப்பு: திணை என்பது ஒழுக்கம். இங்குப் ‘பெருந்திணை; என்பது குறிப்பால் சிறிய ஒழுக்கம் எனப் பொருள்படும். கழி காமத்தைச் சிறுமை எனக் கூறும் மரபு, “செருக்கும் சினமும் |
1 அத்துணைக் கந்தருவம் என்ற தொடர் புரியவில்லை. அப்பெருந்திணைக் கந்தருவம் என்ற கருத்துப்போலும். அப்படியாயின் அத்திணைக் கந்தருவம் என்றிருத்தல் வேண்டும். 2 பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம். 3 விழைச்சு விருப்பம்-இணை விழைச்சு. |