பக்கம் எண் :

ஏறிய மடல்நிறம் இளமைதீர் திறம் சூ.54435

சிறுமையும்”   எனும்  குறளில்  காமக்குற்றத்தைச்  ‘சிறுமை’  எனலாம்  அறிக.  அறிவுடை மக்கட்டன்மைக்
கமையாத  இப்புரை  யொழுக்கத்தைப்   பெரிய  ஒழுக்கம்   என்றது,  அது  ஒழுக்கத்தொடு படாதென்பது
குறிக்கும்  அவையல்  கிளவியாகும்  மங்கலமற்றதையும்  இடக்கரையும்  மறைத்து  எதிர்மறைப் பெயரால்
வழங்குவது  அடிப்பட்ட  தமிழ்மரபு.   தாலிபெருகிற்று.   விளக்கைப்  பெருக்கு  என்பவற்றுள்  பெருமைச்
சொல்  மறுதலைப்  பொருளில்   வருவதுபோலவே,   பொருந்தாக்  காமத்தைப் பெருந்திணை என்பதிலும்
பெருமை  அடை  ஒழுக்கச்  சிறுமையைச்   சுட்டுவதாகும்.  எனவே.  பெருந்திணை  என்பது  அவையில்
உரைக்க வொண்ணா இழிவொழுக்கத்தை மறைத்துக் கூறும் செய்யுள் வழக்கச் சொல்லாகும்.
 

பெருந்திணைவகை     நான்கனுள்,   மடலேறுதலும்   விரும்பாரை வலிந்து கூடலும் ஆடவர் மாட்டே
நிகழும்.   மடன்மா   கூறுதலும்   கற்புடை   மகளிர்க்குப்   பொற்புடை  நெறியன்மையின்,  மடலேறுதல்
எஞ்ஞான்றும்  அவர்க்கின்மை   தெளியப்படும்.   மிக்க  காமத்துமிடல்   தம்மின் வலியராய ஆடவர்பால்
மெல்லியலார்க்கு   ஒல்லாதாகும்.   இளமைநீர்    திறமும்   தேறுதலொழிந்த   காமமும்  இருபாலார்க்கும்
பொதுவாகும்.
 

(1) ஏறிய மடற்றிறம் பெருந்திணைக் குறிப்பாதற்குச் செய்யுள்:
 

“மடலே காமந் தந்த தலரே
மிடைபூ வெருக்கி னலர்தந் தன்றே.
இலங்குகதிர் மழுங்கி யெல்விசும்பு படரப்
புலம்புதந் தன்றே புகன்றுசெய் மண்டில
மெல்லாந் தந்ததன் றலையும் பையென
வடந்தை துவலைக் குடம்பைப்
பெடைபுண ரன்றி லியங்குகுர லளைஇக்
கங்குலுங் கையறவு தந்தன்று,
யாங்காகு வென்கோ லளியேன் யானே?”

(நற்-152)
 

“நானாக நாறு நனைகுழலாள் நல்கித்தன்
பூனாக நேர்வளவும் போகாது-பூணாக
மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமே
னின்றேன் மறுகிடையே நேர்ந்து.”

(திணைமாலை நூற்றைம்பது-16)