“மின்சாயன் மார்பன குறிநின்றேன் யானாகத் தீரத்தறைந்த தலையுந்தன் கம்பலுங் காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநம் சேரியிற் போகா முடமுதிர் அவனாங்கே பாராக் குறழாப் பணியாப் பொழுதன்றி யாரிவ ணின்றீ ரெனக்கூறி பையென வைகாண் முதுபகட்டிற் பக்கத்திற் போகாது தையா றம்பலந் தின்றியோ வென்றுதன் பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும். யாதொன்றும் வாய்வாளே னிற்ப, கடிதகன்று கைம்மாறிக் கைப்படுக்கப் பட்டாய் சிறுமிநீ மற்றியா னேனைப் பிசாசரு ளென்னை நலிதரி னிவ்வூர்ப் பலிநீ பெறாஅமற் கொள்வேனெனப் பலவுந் தாங்காது; வாய்பாடி நிற்ப. முதுபார்ப்பா னஞ்சினனாத லறிந்தியா னெஞ்சா தொருகை மணற்கொண்டு மேற்றூவக் கண்டே கடுதரற்றிப் பூச றொடங்கினன், ஆங்கே யொடுங்கா வயத்திற் கொடுங்கேழ்க் கடுங்க ணிரும்புலி கொண்மார் நிறுத்த வலையுளோ ரேதில் குறுநரி பட்டற்றாற் காதலன் சாட்சி யழுங்க நம்மூர்க் கெலாஅ மாகுல மாகி விளைந்ததை யென்றுந்தன் வாழ்க்கை யதுவாகக் கொண்ட முதுபார்ப்பான்1 வீழ்க்கை பெருங்கருங் கூத்து.” |