இக்குறிஞ்சிக்கலியுள், ‘தீரத்தறைந்த தலையும்’ - வைகாண் முதுபகட்டின்’ ’முதுபார்ப்பான்’ - என வருதலால் இளமை தீர்ந்தான் ஒருவன் இணைவிழைச்சினை மேற்கொண்டான் என்பது புலனாகும். |
(3) தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் பெருந்திணைக் குறிப்பாதற்குத், தன்னை விரும்பாப் பிறன் மனையாளைப் பெட்டொழுகும் பேதையான தென்னிலங்கை அரக்கன் காமக்கதை சாலும். இராவணன் தன் காமப்புரையுணர்ந்து தேறாமல் இறக்குமட்டும் உளத்ததனை வளர்த்த பெருந்திணைப் பெற்றியைக் காட்டும் கம்பர் பாட்டுமிங்குக் கருதற்குரியது. |
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி (மேலும் கீழும் எள்ளிருக்கு மிடனின்றி உயிரிருக்கு மிடனாடியிழைத்த வாறோ? கள்ளிருக்கு மலர்ந்த கூந்தற் சானகியை மனச்சிறையிற் (பரந்த காதல் உள்ளிருக்கு மெனக்கருதி உடல்புகுந்து தடவியதோ (ஒருவன் வாளி” |
(4) மிக்க காமத்து மிடல் பெருந்திணைக் குறிப்பாதற்குச் செய்யுள்:- |
“என்றவ ளரசன்தன்னை நோக்கலன் இவன் கணார்வஞ் சென்றமை குறிப்பிற்றேறிக், கூத்தெலா மிறந்த பின்றை நின்றது மனத்திற் செற்றம், நீங்கித்தன் கோயில் புக்கான் மன்றல மடந்தை தன்னை வலிதிற்கொண்டொலி கொடாரான் |
ரான். (சிந்தா.காந்.685) |
“தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போதுபுல்லி, ஊனுடை உருவக் காக்கை இதழுகக் குடைந்திட்டாங்கு- கானுடை மாலைதன்னைக் கட்டியங்காரன் சூழ்ந்து தானுடை முல்லையெல்லாம் தாதுகப் பறித்திட்டானே.” |
(சிந்தா.50 காந்-686) |