பக்கம் எண் :

34தொல்காப்பியம் - உரைவளம்

விறலிழை நெகிழச் சாஅய்து மதுவே
யன்னை யறியினு மறிக வலர்வா
யம்பன் மூதூர் கேட்பினுங் கேட்க
வண்டிறை கொண்ட வெரிமரு டோன்றி யொ
டொன்பூ வேங்கை கமழுந்
தண்பெருஞ் சாரற் பகல்வந் தீமே.”

(அகம் - 218)
 

இஃது இடத்துய்த்துப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் வரைவுகடாயது.
  

இம்   மணிமிடைபவளத்துள்,   குறிஞ்சிக்கு   ‘முதலுங்  கருவும்  வந்து  உரிப்பொருளாற்  சிறப்பெய்தி
முடிந்தது5.
  

“வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ
லுருவக் குதிரை மழவ ரோட்டிய
முருக னற்போர் நெடுவே ளாவி
யறுகோட் டியானைப் பொதினி யாங்கட்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியல மென்ற சொற்றா
மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த
வேற்மருள் பணைத்தோண் நெகிழச் சேய்நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக
வழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி
னிழறேய்ந் துலறிய மரத்த வறைகாய்
பறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலி
னுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குந ரின்மையின் வௌவுநீர் மடியச்
சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை
நாரின் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி யெடுப்ப வாருற்
நுடை திரைப் பிதிர்விற் பொங்கிமுன்
கடல்போ றோன்றல் காடிறந் தோரே”.

(அகம் - 1)

5. இச் செய்யுளில்  புயல்  சிதறி  என்பதால்  கூதிர்ப்பொழுதும் இருள் நடு நாள் யாமம் என்பனவற்றால்
சிறுபொழுதும்  பெருமலை  விடரகம்  என்பதால் குறிஞ்சி நிலமும் ஆகிய முதற்பொருளும் களிறு புலி
முதலிய  கூறலால்  கருப்பொருளும்,  மலை  விடரகத்து இருள் நடுநாள் யாமத்து வர அரிது என்னாது
எளிதென    வருவையாயின்   யாங்கள்   புலி   முதலிய   வழியருமைக்கு   அஞ்சுவம்;   அதனால்
அன்னையறியினும்  அறிக;  ஊரலர்  எழினும்  எழுக  வேங்கைச்  சாரலில் நீ பகல் வருக’ என்பதால்
உரிப்பொருளும் வந்தன.