நச்சினார்க்கினியர் |
55. முன்னைய... .... ... ... ... என்ப |
‘இது முன்னைய மூன்றுங் 2கைக்கிளைக் குறிப்பே (தொல்-பொ-கள-14) எனக் களவியலுட் கூறுஞ்சிறப்பில்லாக் கைக்கிளைபோலன்றி காமஞ் சாலா இளமையோள்வயிற் கைக்கிளைபோல் இவையுஞ் சிறந்தன. எனவே, எய்தாத தெய்துவித்தது. |
(இ-ள்) இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமுந் தெரிதலும் தேறலும் என்ற குறிப்பு நான்கும் நற்காமத்துக்கு இன்றியமையாது வருதலின் முற்கூறிய சிறப்புடைக் கைக்கிளை யாதற்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
களவியலுட் கூறுங் கைக்கிளை சிறப்பின்மையின் முன்னற் குரியவெனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் ‘ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப’ (தொல்-பொ-கள-2) என்றது முதலாக இந்நான்குங் கூறுமாறு ஆண்டுணர்க. இவை தலைவி வேட்கைக் குறிப்புத் தன்மே னிகழ்வதனைத் தலைவன் அறிதற்கு முன்னே தன் காதன்மிகுதியாற் கூறுவனவாதலிற் கைக்கிளையாயிற்று. இவை தலைவற்கே உரிய வென்பது, ‘சிறந்துழியையஞ் சிறந்ததென்ப’ (தொல்-பொ-கள-3) என்னும் சூத்திரத்திற் கூறுதும். இவையும் புணர்ச்சி நிமித்தமாய்க் குறிஞ்சியாகாவோவெனின், காட்சிப்பின் தோன்றிய ஐயமும் ஆராய்ச்சியுந் துணிவும் நன்றெனக் கோடற்கும் அன்றெனக் கோடற்கும் பொதுவாகலின் அவை ஒருதலையாக நிமித்தமாகா; வழிநிலைக் காட்சியே3 நிமித்தமா மென்றுணர்க. |
(52) |
2 மூன்றாவன ஆசுரம் இராக்கதம் பைசாசம் என்பன. 3 வழி நிலைக்காட்சி. தலைவியின் குறிப்பறிந்த பின்னர்க் காணும்காட்சி. வழிநிலை-பின்னிலை |