களை வகுத்து, அதுமுதல் “எஞ்சியோர்க்கும்” எனும் 41 ஆம் சூத்திரம் வரை அவ்வுரிப் பொருள்களுள் ஒவ்வொன்றன் தனிச்சிறப்பிலக்கணங்களையும் அவ்வத்திணையொடு நிரலே வகைப்பட விளக்கினர். |
இவையெல்லாம் அன்புரித்திணைகள் ஐந்தில் ஒவ்வொன்றற்கே சிறப்புரிமையுடையனவாதல் கூறி, இவற்றின்பின் “நிகழ்ந்தது நினைத்தற்கு” என்பது (சூத்-42) முதல் “ஏனையுவமம்” என்பது (சூத்-48) வரை ஏழு சூத்திரங்களுள் இறுதி நான்கில் உள்ளுரையுவமம் ஒன்றும், முதல் மூன்று சூத்திரங்களில் தனிவேறு மூன்றுமாக நான்கு பொது இலக்கணங்களை ஒத்த காமத்திணை ஐந்திற்கும் ஒத்த இயைபும் தொடர்பும் உடையனவாகத் தெள்ளிதிற் கொள்ள வைத்தார். இவற்றுள், முதலிரு சூத்திரங்களைப் (சூத்-43-44) பாலைக்கே உரியனபோல உரைகாரர் கூறுவது பொருத்தமற்றதாம். |
இரண்டறி கள்விருங் காத லோளே; ...................கான நாறவந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள், கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து ................................................................... அமரா முகத்த ளாகித் தம்மோ ரன்னள் வைகறை யானே”. |
(குறுந்-312) |
எனத் தலைவிபால் நிகழ்ச்சி தலைவன் தன்னுள் நினைத்தற்கு ஏதுவானதைக் கூறும் குறுந்தொகை 312 ஆம் பாட்டும். |
“அம்ம வாழி தோழி........................ மாற்றலம் யாமென மதிப்புக் கூறி நம்பிரிந் துறைந்தோர், மன்ற நீ விட்டனை யோஅவ ருற்ற சூளே” |
எனமுன் தலைவன் நிகழ்த்தியசூளைத் தோழி தலைவியை நினைக்கச் செய்ததைக் கூறும் ஐங்குறு நூற்றுச் (227-ஆம்) செய்யுளும் பாலை பற்றிய அல்ல; ஈரிடத்தும் இவை குறிஞ்சித் திணையில் “நிகழ்ந்ததைப்பின் நினைத்தற்கு ஏது” வானதையே குறித்தன. “மின்னொளிர் அவிரறல்” என்னும் குறிஞ்சிக்கலி (19-ஆம்) பாட்டும் அனையதே. இனி, “தீம்பால் கறந்த |