பக்கம் எண் :

448தொல்காப்பியம் - உரைவளம்

கலமாற்றி”    என வரும்  முல்லைக்  கலிச் (10-ஆம்)  செய்யுளும் “கொடியவும் கோட்டவும்” எனவரும்
குறிஞ்சிக்கலிச்  (18ஆம்)  செய்யுளும் தலைவி “முன்னிகழ்ந்தது  கூறி  நிலையலை   “உணர்த்துவன; இவை
முறையே   முல்லையினும்     குறிஞ்சியினும்  வந்தன.    இவ்வாறே  இவ்விரு  சூத்திரக்  குறிப்புக்களும்,
உரைகாரர்  கூறுமாறு பாலைக்குத் தனியுரிமை  கொள்ளாமல்,  ஐந்திணை   அனைத்திற்கும்  வந்து பயிலும்.
‘மரபுநிலை  திரியா  மாட்சியவாகி  விரவும்    பொருளும் விரவுவதும்,”   “உள்ளுறை யுவமம் பயிலுவதும்”,
ஒத்த  காமத்திணை   ஐந்திற்கும்   ஒத்த   உரிமையோ   டொன்றிப்   பயிலும்  என்பதை  உரைகாரரும்
கூறுகின்றனர். அதனால், அவற்றிற்கு மேற்கோள்மிகையாகும்.

(51)
 

சிவலிங்கனார்
 

இச்சூத்திரம்   காமம்சாலா   இளமையோள்வயிற்   கைக்கிளையே  யன்றிப்  பிறிதும்  ஓர்  கைக்கிளை
உண்டென்கின்றது.
 

(இ-ள்)   களவொழுக்கத்தில்    இயற்கைப்   புணர்ச்சிக்கு   முன்னர்  நிகழும்  நான்கு நிகழ்ச்சிகளும்
எழுவகைத் திணைகளுள் முற்பட்டதாகிய கைக்கிளைக்குரிய என்ப நூலோர் என்றவாறு.
 

எதிர்பாரா   நிலையில் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காணுதலும்,   யார் என ஐயப்படுதலும், சில
குறிப்புகளால்  ஐயம் நீக்குதலும், கண்களின்   பார்வைக்குறிப்பால்   புணர்ச்சி விருப்பம் தெளிதலும் ஆகிய
நான்கும்  நிகழ்ந்த  பின்னரே புணர்ச்சி நிகழும்   ஆதலின் அக்காட்சி,   ஐயம், தெரிதல்,  தேறல் என்னும்
நான்கும்   எதன்பாற்படும்   என்னும்   ஐயம்    தோன்றும்     ஏன்எனின்   புணர்தல்    தொடர்பாகக்
குறிஞ்சியொழுக்கம்  தொடங்குதலின் குறிஞ்சித்  திணை என்பது  புணர்ச்சியையே  குறித்ததாம். அதனால்
அந்நான்கும்  தலைவன் கண்ணவாகவே  புலனெறிவழக்கம்  செய்யப்படுதலின்  காமம்சாலா  இளமையோள்
வயிற்கைக்  கிளைபோல  ஒருமருங்கு   பற்றியதாகவே   கொண்டு  கைக்கிளையின்  பாற்படுத்தல் நூலோர்
துணிபாயிற்று.
 

கைக்கிளைமுதலா     (1)    என்னும்   சூத்திரம்  தொடங்கி இச்சூத்திரம் வரையும் வாழ்க்கைச்சுருக்கம்
கூறப்பட்டது.  ஒருவனும்  ஒருத்தியும்  ஊழ்வயத்தால்   எதிர்ப்பட்டுக்கண்டு    ஐயுற்றுத் தெரிந்து புணர்ச்சி
விருப்புத்  தெளிந்து  முதலிற்  புணர்ந்து  பிரிந்து    இருந்து இரங்கி ஊடி   மீளவும் புணர்ந்து இப்படியே
வாழ்க்கை நடத்தி இளமை தீர்ந்து துறவறம் காத்துப்