பக்கம் எண் :

அகத்திணையியல் சூ.335

இது பிரிவிடையாற்றாது தோழிக்குக் கூறியது.
  

இக்   களிற்றியானை  நிரையுள்,   பாலைக்கு  முதலும்  கருவும்  வந்து  உரிப்பொருளாற்  சிறப்பெய்தி
முடிந்தது6
  

“சேற்றுநிலை முனைஇய செங்கட் காரா
னூர்மடி கங்குலி னோன்றளை பரிந்து
கூர்முள் வேலி கோட்டி னீக்கி
நீர்முதிர் பழனத்து மீனுட னிரிய
வந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமல ராரு மூர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்
றுறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தற்
பிறளு மொருத்தியை யெம்மனைத் தந்து
வதுவை யயர்ந்தனை யென்ப வஃதியாங்
கூறேம் வாழிய ரெந்தை செறுநர்
களிறுடை யிருஞ்சமந் ததைய நூறு
மொளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன்
பிண்ட நெல்லி னள்ளூ ரன்னவெம்
மொண்டொடி நெகிழினு நெகிழ்க.
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ”

(அகம் - 46)
 

இதுவாயின் மறுத்தது.
  


6. அழல்   போல்   வெங்கதிர்.........காடு  என்பதால்  பாலை  நிலமும் வெங்கதிர் தெறுதலின் என்பதால்
முதுவேனிலும்  நண்பகலும்  ஆகிய  முதற்பொருளும்  உலறிய  மரம்,  அறுசுனை,  நாரரி  முருங்கை
என்பதால்   கருப்பொருளும்,   ‘பிரியலம்   என்ற  சொல்  தாம்  மறந்தனர்  கொல்லோ’  என்பதால்
உரிப்பொருளும் அமைந்தவாறு காண்க.