களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல். |
உலகியல் வழக்காவது, உலகத்தார் ஒழுகலாற்றோடு1 ஒத்து வருவது. |
பாடல் சான்ற புலன்நெறி வழக்கமாவது, இவ்விருவகை யானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள்.2 |
கலியே பரிபாட்டு அ இரு பாவினும் உரியது ஆகும் என்மனார் புலவர் என்றது, கலியும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவிலும் உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு. |
எனவே, இவை இன்றியமையாதன என்றவாறு. ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப் பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதாராயினர். புறப்பொருள் உலகியல் பானன்றி வாராமையின் அது நாடக வழக்கம் அன்றாயிற்று. |
(56) |
நச்சினார்க்கினியர் |
56. நாடக..............புலவர் |
இது புலனெறி வழக்கம் இன்னதென்பதூஉம், அது நடுவணைந்திணைக்கு உரிமையுடைத்தென்பதூஉம், இன்ன செய்யுட்கு உரித்தென்பதூஉம் உணர்த்துதனுதலிற்று. |
1 ஒழுகலாறு-நடைமுறை 2 அகப்பொருட் செய்தியாவும் புலனெறி வழக்கிலேயே பாடப்படும் என்பது இவர் கருத்து. புலனெறி வழக்கில் பாடப்படுதலால் கைக்கிளை பெருந்திணைகளும் அகப்பொருளாகும் என்பதும் இவர் கருத்து. |