பக்கம் எண் :

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் சூ.56455

களோடும்;     உலகியல் வழக்கினும்   -   உலக   மக்களின்   ஒழுகலாற்றோடும்; பாடல் சான்ற புலனெறி
வழக்கம்  -  சிறப்புறப்  புலவரால்  அமைக்கப்படும்  அகத்திணை    மரபுகள்;    கலியே  பரிபாட்டாயிரு
பாவினும் - கலியும் பரிபாடலுமாகிய இரு   பாவகைகளிலும்;   உரியதாகும் - சிறப்புரிமை கொண்டு பயிலும்
என்மனார் புலவர் - என்று கூறுவர் பொருள் நூற் புலவர்.
 

(பொருந் - நடிப்பு: ஒருவர் போல நடிப்பது)
 

குறிப்பு  :  புலவராற்  பாடப்பெற்ற அகத்துறை மரபுகள் உலகியலைத் தழுவி அமைவதே இயல்நெறியின்
இன்றியமையாக்குறிக்கோளும்   பயனுமாமென்பதை இச்சூத்திரம்   வற்புறுத்துகிறது.  மக்கள் வாழ்க்கையொடு
தொடர்பற்ற   புலனெறி  வழக்கம்  எதுவாயினும்  பயனும்  சுவையும்    பயவாது.    அதனால்  உலகியல்
வழக்கொடு அகத்திணைப் புலனெறி வழக்குத்தழுவி நடக்கும் என இதிற் கூறப்பட்டது.
 

நாடகம்     மக்கள்   வாழ்க்கையே   உயரிய குறிக்கோளோடு  இயைத்துச் சுவைபட நடித்துக் காட்டும்
நோக்குடையதாய்  உலகியலொடு  ஒன்றுபட்டு  ஒழுகுவதே    யாமாகலின்  உலகியல்  வழக்கொடு  நாடக
வழக்கும்  உடன் கூறப்பட்டது. உலகியல் வழக்கு   உள்ளவாறுலகத்தார் ஒழுகலாரும்  அவ்வாழ்வொழுக்கச்
சிறப்பைச்   சுவைபட   ஆடிக்காட்டுவதே     நாடக   வழக்காம்.  ஆதலால்   இவ்விரண்டும்  மக்களின்
வாழ்க்கையொடுபட்ட இயல்புகளையே   குறிப்பனவாம். அகத்திணைப் புலனெறி வழக்கம்   எல்லாம் மக்கள்
வாழ்க்கையின்  மெய்யியல்புகளைத்    தழுவியே    நடத்தல் இன்றியமையாததாதலால், அவ்வாறு புலனெறி
வழக்கஞ் செய்தலே தமிழ் மரபென்பதைத் தொல்காப்பியர் இச்சூத்திரத்தால் வலியுறுத்துவர்.
 

இனி,     பலவகைப் பாக்களில்   புறத்திணைக்குச்   சிறப்பனவும் புறத்திணைக்கும்  அகத்திணைக்கும்
பொதுவாய்  வருவனவுமான  வெண்பா அகவல்   வஞ்சிகளினும். கலியும் கலியுறுப்புக்   கொண்டு நடக்கும்
பரிபாட்டுமாகிய    இரண்டுமே   அகத்திணைக்குச்     சிறந்து   பயிலும்   பெற்றியன.    அகத்திற்குரிய
பல்வேறுணர்ச்சிகளுக்கேற்பச்  செவ்வி  சிறந்த    ஒசை  வளமும்,   உள்ளியன உரைதற்கு வேண்டியாங்கு
விரவும் துள்ளல்