தூக்குமுடையன அவ்விருபாக்களுமாதலால், பண்டைத் தமிழ்ப் புலவர் அவற்றை அகத்திணைக்குரியவாக் கொண்டனர். அதனால் இவ்வியலில் அச்சிறப்புரிமை சுட்டப்பட்டது. |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் புலனெறி வழக்கின் இலக்கணமும் அதுவரும் பாடல்கள் இவை என்பதும் கூறுகின்றது. |
(இ-ள்) நாடக வழக்கத்தையும் உலகியல் வழக்கத்தையும் சேர்த்துப் பாடுதல் அமைந்த புலனெறி வழக்கம் என்பது, கலிப்பா பரிபாடற்பா என்னும் அவ்விருவகைப் பாக்களிலும் பாடுதற்குரியதாகும் என்பர் புலவர் என்றவாறு. |
நாடக வழக்கு என்பது நேர்க்குநேர் உரையாடலாக அமைவது. உலகவழக்கு என்பது ஒருவர் ஒருவரிடம் கூறுவதாக அமைவது. புலனெறிவழக்கு என்பது நேர்க்கு நேர் உரையாடலும் ஒருவர் ஒருவரிடம் கூறுவதும் ஆகிய இரண்டும் அமைவது, எனவே நாடகச் செய்யுள் உலகியற் செய்யுள் புலனெறி வழக்குச் செய்யுள் எனச் செய்யுள் மூவகைப்படும் என்றார் ஆசிரியர் என்க. |
இக்காலத்துள்ள மனோன்மணீயம் விசுவநாதம் போலும் நூல்கள் நாடகச் செய்யுள் நூல்கள். அவற்றின் செய்யுள்கள் நாடகச் செய்யுள்களாம். |
ஐங்குறு நூறு அகநானூறு குறுந்தொகைச் செய்யுள்கள் உலகியற் செய்யுள்களாம். |
கலித்தொகை பரிபாடச்செய்யுள்கள் பல புலனெறி வழக்குச் செய்யுள்களாம். |
கலித்தொகையில் இம் முத்திறச் செய்யுள்களையும் காணலாம். |
‘எறித்தருகதிர் தாங்கி’ என்னும் பாலைக்கலிப் பாடலில் (9). உடன்போக்கில் சுரவழிச் சென்ற செவிலி அங்குவந்த ஒழுக்கத்து அந்தணரிடம் |
அந்தணீர், என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும் |